10 Aug 2010

அன்பே பிரதானம்

அன்பே பிரதானம் - சகோதர
அன்பே பிரதானம்

பண்புறு ஞானம் பரம நம்பிக்கை
இன்பவிஸ்வாசம் இவைகளிலெல்லாம்

பலபல பாஷை படித்தறிந்தாலும்
கலகல வென்னும் கைமணியாமே

என் பொருள் யாவும் ஈந்தளி த்தாலும்
அன்பிலையானால் அதில் பயனில்லை

துணிவுடன் உடலை சுடக் கொடுத்தாலும்
பணிய அன்பில்லால் அதிற் பயனில்லை

சாந்தமும் தயவும் சகல நற்குணமும்
போந்த சத்தியமும் - பொறுமையுமுள்ள

புகழிறுமாப்பு பொழிவு பொறாமை
பகைய நியாயப் பாவமுஞ் செய்யா

சினமடையாது தீங்கு முன்னாது
தினமழியாது தீமை செய்யாது

சகலமும் தாங்கும் சகலமும் நம்பும்
மிகை பட வென்னும் மேன்மை பெற்றோங்கும்

No comments:

Post a Comment

If you like this blog please write your comment