Showing posts with label அல்லேலூயா கர்த்தரையே. Show all posts
Showing posts with label அல்லேலூயா கர்த்தரையே. Show all posts

18 Oct 2010

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்

அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள்
எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள்

இராஜாதி இராஜனாம் இயேசுராஜன்
பூமியில் ஆட்சி செய்வார்
அல்லேலூயா அல்லேலூயா
தேவனைத் துதியுங்கள்

தம்புரோடும் வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள்
இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
எக்காளமும் கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்

சூரியனே சந்திரனே தேவனைத் துதியுங்கள்
ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
அக்கினியே கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள்
அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்

பிள்ளைகளே வாலிபரே தேவனைத் துதியுங்கள்
வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
பெரியவரே பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்

ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள்
அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள்