Showing posts with label வல்லமை தேவை தேவா. Show all posts
Showing posts with label வல்லமை தேவை தேவா. Show all posts

12 Oct 2010

வல்லமை தேவை தேவா

வல்லமை தேவை தேவா வல்லமை தாரும் தேவா
இன்றே தேவை தேவா இப்போ தாரும் தேவா

பொழிந்திடும் வல்லமை உன்னதத்தின் வல்லமை
ஆவியின் வல்லமை அக்கினியின் வல்லமை

மாம்சமான யாவர் மேலும்
ஆவியை ஊற்றுவேன் என்றீர்
மூப்பர் வாலிபர் யாவரும்
தீர்க்கதரிசனம் சொல்வாரே

பெந்தகொஸ்தே நாளின் போல
பெரிதான முழக்கத்தோடு
வல்லமையாக இறங்கி
வரங்களினாலே நிரப்பும்

மீட்கப்படும் நாளுக்கென்று
முத்திரையான ஆவி தாரும்
பிதாவே என்று அழைக்க
புத்திர சுவிகாரம் ஈந்திடும்