Showing posts with label ஒருபோதும் உன்னை. Show all posts
Showing posts with label ஒருபோதும் உன்னை. Show all posts

6 Oct 2010

ஒருபோதும் உன்னை பிரியா

ஒருபோதும் உன்னை பிரியா நிலையான உறவொன்று வேண்டும்
என் உடல்கூட எரிந்தாலும் உன் நாமம் நான் சொல்ல வேண்டும்
நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே
நீங்காத நிழலாக வா இறைவா

உன் கையில் என்னை நீ பொறித்தாய்
பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய்
ஏன் என்னை நீ தெரிந்தாய் என் வாழ்வில் ஏன் நுழைந்தாய்
உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன்
தாய் உறவொன்று தேடும் பிள்ளைபோல் நின்றேன்
உன்னோடு நான் வாழுவேன் ஒருபோதும் உன்னை

நீர் தேடும் மான்போல தேடிவந்தேன்
நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன்
என்னுள்ளே வாழும் தெய்வம் என்னை நீ ஆளும் தெய்வம்
என் இயேசு நீயே என்னுள்ளம் நின்றாய்
நிதம் என் பாதை முன்னே நீதானே சென்றாய்
உன்னோடு நான் வாழுவேன் ஒருபோதும் உன்னை