Showing posts with label துதி கனம் மகிமை. Show all posts
Showing posts with label துதி கனம் மகிமை. Show all posts

9 Oct 2010

துதி கனம் மகிமை எல்லாம்

துதி கனம் மகிமை எல்லாம்
நம் இயேசு ராஜாவுக்கே

தூதர்களே துதியுங்கள்
தூத சேனையே துதியுங்கள்
சூரிய சந்திரரே துதியுங்கள்
பிரகாச நட்சத்திரமே துதியுங்கள்

வானாதி வானங்களே துதியுங்கள்
ஆகாய மண்டலமே துதியுங்கள்
தண்ணீர் ஆழங்களே துதியுங்கள்
பூமியிலுள்ளவையே துதியுங்கள்

அக்கினி கல் மழையே துதியுங்கள்
மூடுபனி பெருங்காற்றே துதியுங்கள்
மலைகள் மேடுகளே துதியுங்கள்
பறவை பிராணிகளே துதியுங்கள்

வாலிபர் கன்னியரே துதியுங்கள்
பெரியோர் முதியோரே துதியுங்கள்
பிள்ளைகளே மகிழ்ந்து துதியுங்கள்
நாம் இயேசுவை என்றுமே துதித்திடுவோம்