Showing posts with label இயேசு ராஜா முன்னே. Show all posts
Showing posts with label இயேசு ராஜா முன்னே. Show all posts

30 Oct 2010

இயேசு ராஜா முன்னே செல்கிறார்

இயேசு ராஜா முன்னே செல்கிறார்
ஓசன்னா கீதம் பாடுவோம்
வேகம் சென்றிடுவோம்
ஓசன்னா ஜெயமே - 2
ஓசன்னா ஜெயம் நமக்கே - 2

அல்லேலுயா துதி மகிமை
என்றும் அல்லேலுயா துதி மகிமை
இயேசு ராஜா எங்கள் ராஜா
என்றென்றும் போற்றிடுவோம்

துன்பங்கள் சூழ்ந்து வந்தாலும்
தொல்லை கஷ்டங்கள் தேடி வந்தாலும்
பயமும் இல்லை கலக்கம் இல்லை
கர்த்தர் நம்முடனே

யோர்தானின் வெள்ளம் வந்தாலும்
எரிகோ கோட்டை முன்னே நின்றாலும்
பயமும் இல்லை கலக்கம் இல்லை
மீட்பர் நம்முடனே