Showing posts with label உதவி வரும் கன்மலை. Show all posts
Showing posts with label உதவி வரும் கன்மலை. Show all posts

16 Aug 2010

உதவி வரும் கன்மலை

உதவி வரும் கன்மலைநோக்கிப் பார்கின்றேன்
வானமும் வையமும் படைத்தவரை நான் பார்கின்றேன்

கால்கள் தள்ளாட விடமாட்டார்
காக்கும் தேவன் உறங்க மாட்டார்
இஸ்ரவேலை காக்கிறவர்
என்னாளும் தூங்க மாட்டார் - உதவி வரும்

கர்த்தர் என்னை காக்கின்றார்
எனது நிழலாய் இருகின்றார்
பகலினிலும் இரவினிலும்
பாது காக்கின்றார் - உதவி வரும்

கர்த்தர் எல்லா தீங்கிற்கும்
விலக்கி என்னைக் காத்திடுவார்
அவர் எனது ஆத்துமாவை
அனுதினம் காத்திடுவார் - உதவி வரும்

போகும் போதும் காக்கின்றார்
திரும்பும் போதும் காக்கின்றார்
இப்போது எப்போது
என்னாளும் காக்கின்றார் - உதவி வரும்