விந்தை கிரிஸ்தேசு ராசா
உந்தன் சிலுவை என் மே ன்மை
சுந்தரம் மிகும் இந்தப் புவில்
எந்த மேன்மைகள் எனக் கிருப்பினும்
திரண்ட செல்வம் உயர்ந்த கல்வி
செல்வாக்குகள் மிகவிருந்தாலும்
குருசை நோக்கிப் பார்க்க எனக்கு
உரிய பெருமை யாவும் அற்பமே
உம் குருசே ஆசிக்கெல்லாம்
உற்றாம் வற்றா ஜீவ நதியாம்
துங்க ரத்த ஊற்றில் முழ்கித்
அடைந்து மேன்மை ஆகினேன்
சென்னி விழா கை காநின்று
சிந்து ததோ துயரோடன்பு
மன்னா இதைப் போன்ற காட்சி
எந் நாளிலுமே எங்கும் காணேன்
இந்த விந்தை அன்புக் கீடாய்
என்ன காணிக்கை ஈந்திடுவேன்
எந்த அரும் பொருள் ஈடாகும்
என்னை முற்றிலும் உமக்களிகிறேன்
No comments:
Post a Comment
If you like this blog please write your comment