என்னை கண்டவரே என்னை காண்பவரே
என்னை காத்தவரே என்னை காப்பவரே
ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா
பாவியாய் இருந்த என்னை கண்டுகொண்டீரே
பட்சமாய் மார்போடு அணைத்துகொண்டீரே
நெருக்கத்தில் இருந்த என்னை தேடி வந்தீரே
நெருங்கி அன்போடு சேர்த்துகொண்டீரே
ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா - என்னை
கடந்தகாலமெல்லாம் காத்துக்கொண்டீரே
வருகிற காலத்திலும் காத்துக்கொள்வீரே
கொடுத்த வாக்குத்தத்தம் பூர்த்தி செய்தீரே
புதிய வாக்குருதி கொடுத்துவிட்டீரே
ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா - என்னை
தள்ளாடி நடந்த என்னை தேடி வந்தீரே
மதில்களை தாண்டும்படி தூக்கிவிட்டீரே
நெரிந்த நாணலைபோல் வாழ்ந்துவந்தேனே
எரியும் தீபிளம்பாய் மாற்றிவிட்டீரே
ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா ஆலேலூயா - என்னை