Showing posts with label என்னைத் தேடி இயேசு. Show all posts
Showing posts with label என்னைத் தேடி இயேசு. Show all posts

23 Sept 2010

என்னைத் தேடி இயேசு

என்னைத் தேடி இயேசு வந்தார்
எந்தன் வாழ்வை மாற்றி விட்டார்
அல்லேலுயா நான் பாடுவேன்
ஆடிப்பாடித் துதித்திடுவேன்

மகனானேன் நான் மகளானேன்
அப்பா பிதாவே என்றழைக்கும்
உரிமையை எனக்குத் தந்தார்

ஆவி தந்தார் துய ஆவி தந்தார்
வல்லமையும் அன்பும் ஞானமும் கொண்ட
பரிசுத்த ஆவி தந்தார்

சுகமானேன் நான் சுகமானேன்
இயேசு கிறிஸ்துவின் காயங்களால்
சுகமானேன் சுகமானேன்

தெரிந்து கொண்டார் என்னை தெரிந்து கொண்டார்
பரிசுத்தனும் புனிதனுமாய்
அவர் திருமுன் வாழ