அசைவாடும் ஆவியே தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப இறங்கி வாருமே
பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியால்
கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியால்
தேற்றிடுமே உள்ளங்களை இயேசுவின் நாமத்தினால்
ஆற்றிடுமே காயங்களை அபிஷேகத் தைலத்தினால்
துடைத்திடுமே கண்ணீரெல்லாம் கிருபையின் ஆவியால்
நிறைத்திடுமே ஆனந்தத்தால் மகிழ்வுடன் துதித்திடவே