அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா
காருண்யத்தினால் என்னை இழுத்துக்கொண்டீரே
உங்க அன்பு பெரியது
உங்க இரக்கம் பெரியது
உங்க கிருபை பெரியது
உங்க தயவு பெரியது
அனாதையாய் அலைந்த என்னை தேடி வந்தீரே
அன்பு காட்டி அரவணைத்து காத்து கொண்டீரே
தாயின் கருவில் தோன்று முன்னே தெரிந்து கொண்டீரே
தாயை போல ஆற்றி தேற்றி அரவணைத்தீரே
நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம்
கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கிறேன் ஐயா
கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை
சகலத்தையும் நன்மையாக செய்து முடித்தீரே
No comments:
Post a Comment
If you like this blog please write your comment