நம்பி வந்தேனே மேசியா நான் நம்பி வந்தேனே - திவ்ய
சரணம் சரணம் சரணம் ஐயா நான் நம்பி வந்தேனே
தம்பிரான் ஒருவனே தஞ்சமே தருவனே - வரு
தாவீது குமார குரு பரமனுவேலே - நம்பி வந்தேனே
நின்பாத தரிசனம் அன்பான கரிசனம் - நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில் - நம்பி வந்தேனே
நாதனே கிருபை கூர் வேதனே சிறுமை தீர் - அதி
நலம் மிகும உனதிரு திருவடி அருளே - நம்பி வந்தேனே
பாவியில் பாவியே கோவியில் கோவியே கண
பரிவுடன் அருள் புரி அகல விடாதே - நம்பி வந்தேனே
ஆதி ஓலோலமே பாதுகா காலமே - உன
தடிமைகள் படு துயர் மெத்த - நம்பி வந்தேனே
No comments:
Post a Comment
If you like this blog please write your comment