14 Aug 2010

குயவனே குயவனே

குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கி பார்த்திடுமே

வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்
இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே - குயவனே

விலைபோகாத பாத்திரம் நான்
விரும்புவார் இல்லையே
விலையில்லா உம் கிருபையால்
 உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத்
தம்மைப்போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடமையாக்கிடுமே- குயவனே

மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின்பற்றியே
கண்டேன் இல்லை இன்பமே
காணாமல் போன பாத்திரம் என்னை
தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம் பாதம்
செல்லும் பாதையில் நடத்திடுமே - குயவனே

No comments:

Post a Comment

If you like this blog please write your comment