25 Oct 2010

இயேசுவைப்போல் அழகுள்ளோர் யாருமில்லை

இயேசுவைப்போல் அழகுள்ளோர் யாருமில்லை பூவினில்
இதுவரை கண்டதில்லை காண்பதுமில்லை

பூரண அழகுள்ளவரே! பூவில் எந்தன் வாழ்க்கையதில்
நீரே போதும் வேறே வேண்டாம் எந்தன் அன்பர் இயேசுவே
மண்ணுக்காக மாணிக்கத்தை விட்டிட மாட்டேன்


சம்பூரண அழகுடன் என்னை மீட்டுக் கொண்டீரே
சம்பூரணமாக என்னை உந்தனுக்கீந்தேன் - பூரண அழகு

எருசலேம் குமரிகள் எந்தனை வளைந்தோராய்
உம்மில் உள்ள எந்தன் அன்பை நீக்க முயன்றார் - பூரண அழகு

நீர்மேல் மோதும் குமிழிபோல் மின்னும் பாவ மோகமே
என்மேல் வந்து வேகமாக மோதியடித்தால் - பூரண அழகு

தினந்தோறும் உம்மிலுள்ள அன்பு என்னில் பொங்குதே
நேசரே நீர் வேகம் வந்து என்னைச் சேருமே – பூரண அழகு

No comments:

Post a Comment

If you like this blog please write your comment