13 Oct 2010

எங்களுக்குள்ளே வாசம் செய்யும்

எங்களுக்குள்ளே வாசம் செய்யும் ஆவியானவரே..
இந்நாளில் உம் சித்தம் போல் நடத்திச் செல்லுமையா

ஆவியானவரே ஆவியானவரே
பரிசுத்த ஆவியானவரே - 2

எப்படி நான் ஜெபிக்கவேண்டும்
எதற்காக ஜெபிக்க வேண்டும்
கற்றுத் தாரும் ஆவியானவரே - 2
வேத வசனம் புரிந்து கொண்டு
விளக்கங்களை அறிந்திட
வெளிச்சம் தாரும் ஆவியானவரே - 2

கவலை கண்ணீர் மறக்கணும்
கர்த்தரையே நோக்கணும்
கற்றுத்தாரும் ஆவியானவரே - 2
செய்த நன்மை நினைக்கணும்
நன்றியோடு துதிக்கணும்
சொல்லித் தாரும் ஆவியானவரே - 2

எங்கு செல்ல வேண்டும்
என்ன சொல்ல வேண்டும்
வழி நடத்தும் ஆவியானவரே - 2
உம் விருப்பம் இல்லாத
இடங்களுக்குச் செல்லாமல்
தடுத்து நிறுத்தும் ஆவியானவரே - 2

எதிரிகளின் சூழ்ச்சிகள்
சாத்தானின் தீக்கணைகள்
எதிர்த்து நிற்க பெலன் வேண்டுமே
உடல் சோர்வு அசதிகள்
பெலவீனங்கள் நீங்கி
உற்சாகத்தால் நிரம்ப வேண்டுமே

No comments:

Post a Comment

If you like this blog please write your comment