30 Sept 2010

ஊற்றும் தேவா ஊற்றும்

ஊற்றும் தேவா ஊற்றும் உம் வல்லமையை ஊற்றும்
நிரப்பும் தேவா நிரப்பும் உம் அபிஷேகத்தால் நிரப்பும்

ஊற்றும் தேவா நிரப்பும் தேவா
உம் வல்லமையால் என்னை இப்போ நிரப்பிடுமே

அக்கினியின் வல்லமை எனக்கு வேண்டுமே
சத்துருவின் கிரியைகளை சுட்டெரிக்கவே
அபிஷேகத்தின் வல்லமை இப்போ வேண்டுமே
எதிரியின் நுகங்களை முறித்தெரியவே

உன்னதத்தின் வல்லமை எனக்கு வேண்டுமே
உன்னதரை ப்ற்றி சாட்சி எங்கும் பகரவே
எண்ணெய் அபிஷேகம் இப்போ எனக்கு வேண்டுமே
இருளின் ஜனங்கள் நடுவில் வெளிச்சம் வீசவே

வல்லமையை பெருமழையை பொழியச்செய்யுமே
வல்லவரின் நாமத்துக்காய் என்றும் நிற்கவே
ராஜரீக அபிஷேகத்தை என்மேல் ஊற்றுமே
ராஜியத்தின் மேன்மைக்காக என்றும் உழைக்கவே

For Audio Please Click Here and select the 8th song


Thanks to Word Of God Church, Doha - Qatar www.wogim.org

No comments:

Post a Comment

If you like this blog please write your comment