7 Aug 2010

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்

துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்
சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்

அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்
கதி உம்பர்கள் தோலும் இங்கித கருணைப் பிர தாபன் - துதி தங்கிய

மனதை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத தனார்
நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மா பரிசுத்தனார் - துதி தங்கிய

திருவான் உலகரசாய் வளர் தேவ சொரூபனார்
ஒரு மாதுடை வினை மாறிட நரர் ருபமதனார் - துதி தங்கிய

அபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்
எபிரேயர்கள் குளம் தாவீதென் அரசற் கோர் குமாரன் - துதி தங்கிய

சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்
கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் - துதி தங்கிய

விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்
பண் ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் - துதி தங்கிய

No comments:

Post a Comment

If you like this blog please write your comment