2 Oct 2010

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்

கீதம் கீதம் ஜெய ஜெய கீதம்
கை கொட்டிப் பாடிடுவோம்

இயேசு ராஜன் உயிர்த்தெழுந்தார் அல்லேலூயா
ஜெயம் என்று ஆர்ப்பரிப்போம் - ஆ... ஆ...

பார் அதோ கல்லறை மூடின பெருங்கல்
புரண்டுருண்டோடுது பார் - அங்கு
போட்ட முத்திரைக் காவல் நிற்குமோ
தேவ புத்திரர் சந்நிதிமுன் - ஆ... ஆ...

வேண்டாம் வேண்டாம் அழுதிட வேண்டாம்
ஓடி உரைத்திடுங்கள் - தாம்
கூறின மாமறை விட்டனர் கல்லறை
போங்கள் கலிலேயாவுக்கு - ஆ... ஆ...

No comments:

Post a Comment

If you like this blog please write your comment