சருவ லோகதிபா நமஸ்காரம்
சருவ சிருஷ்டிகரே நமஸ்காரம்
தரை கடல் உயிர் வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே நமஸ்காரம்
திரு அவதாரா நமஸ்காரம்
ஜெகத் திரட்சகனே நமஸ்காரம்
தரணியின் மானுடர் உயிர் அடைந்தோங்க
தருவினில் மாண்டோய் நமஸ்காரம்
பரிசுத்த ஆவி நமஸ்காரம்
பரம சற்குருவே நமஸ்காரம்
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்
முத்தொழிலோனே நமஸ்காரம்
மூன்றில் நின்றோனே நமஸ்காரம்
கர்த்தாதி கர்த்தா கருணை சமுத்திரா
நித்ய திரியேகா நமஸ்காரம்
No comments:
Post a Comment
If you like this blog please write your comment