12 Aug 2010

காற்று வீசுதே காற்று

காற்று வீசுதே காற்று வீசுதே கீழ் காற்று என்றும் வீசுதே
தடைகள் விலகுதே சபைகள் வளருதே அபிஷேகத்தின் கற்றினால்

அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா ஆமென் - 4 - காற்று வீசுதே

காற்றை அனுப்பினீர் காடைகள் வந்ததே பாளையம் நிரம்பச்செய்தீர்
அனுப்பும் தேவா அபிஷேகக்காற்றை இன்று சபைகள் நிரம்பி வளர

அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா ஆமென் - 4 - காற்று வீசுதே

பலத்த காற்று மேல் வீட்டை நிரப்பிற்றே ஆதிசபை பெலம் கொண்டது
ஆத்துமாக்களை அனுதினம் சேர்த்தீர் இன்றும் சேரும் எங்கள் சபையிலே
 
அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா ஆமென் - 4 - காற்று வீசுதே


காற்று வீசட்டும் பதர்கள் பறக்கட்டும் கோதுமை மணிகள் தங்கட்டும்
நேசத்தின் காற்று அனுதினம் வீசடும் ஒரு மனம் ஒற்றுமை வளரட்டும்

அல்லேலுயா அல்லேலுயா அல்லேலுயா ஆமென் - 4 - (காற்று வீசுதே)

For Audio Please Click Here and select the 2nd Song
Thanks to Word Of God Church, Doha- Qatar www.wogim.org

No comments:

Post a Comment

If you like this blog please write your comment