என் யேசுவே உன்னை நான் மறவேன் மறவேன்
எந்நாளும் உன் அருளை நான் பாடி மகிழ்ந்திருப்பேன்
உன் நாமம் என் வாயில் நல் தேனாய் இனிக்கின்றது
உன் வாழ்வு என் நெங்சில் நல் செய்தியாய் தொனிக்கின்றது
உன் அன்பை நாளும் எண்ணும் போது ஆனந்தம் பிறக்கின்றது
உன் நெஞ்சின் கனவுகளை நிறைவேற்ற நான் உழைப்பேன்
அறிவாகும் பாலங்களை உலகெங்கும் நான் அமைப்பேன்
இறையாட்சி மலரும் காலம் வரையில் இனிதாய் எனை அளிப்பேன்
No comments:
Post a Comment
If you like this blog please write your comment