இயேசப்பா நானும் வருகிறேன்
கலிலேயா கடலோரமாய்
என்னை விட்டுப் போகாதிங்க ராஜா
என்னுள்ளம் தாங்காதுங்க
அன்று ஒலிவமலையில் ஏறி மறுரூபமானிங்க
கடலின் மேலே நடந்து அதிசயம் செய்தீங்க -2
எம்மாவூரு சீடரோடு நடந்து சென்றீங்க
என்னோடு இன்று நடந்து வாருங்க
அதுவே என் வாஞ்சை அதுவே என் தாகம்
அதுதான் என் சந்தோஷமே
மார்த்தாள் அழைத்தபோது கூடப் போனிங்க
மரித்த லாசரை உயிர்த்தெழும்பச் செய்தீங்க
உம்மாலே கூடும் எல்லாமே கூடும்
கூடாதது ஒன்றுமில்லை
மோசேயோடு கூட நடந்து சென்றீங்க
கடலை பிரிந்து நடக்க உதவி செய்தீங்க
அற்புத தேவன் அதிசய தேவன்
எல்லாம் நீர் செய்திடுவீர்
No comments:
Post a Comment
If you like this blog please write your comment