9 Oct 2010

அக்கினியே தேவ அக்கினியே

அக்கினியே தேவ அக்கினியே இறங்கிடுமே இப்போ இறங்கிடுமே
தேவநதியே ஜீவநதியே பாய்ந்திடுமே என்னில் பாய்ந்திடுமே

ஆவியால் அக்கினியால் என்னை அபிஷேகிப்பேன் என்றீரே
உம் மகா வல்லமையால் என்னை நிரப்பிடுமே இயேசுவே அக்கினியே

அக்கினி நாவுகளால் என்னில் அமர்ந்திடும் தேவ ஆவியே
பற்பல பாக்ஷைகளை பேசி துதித்திட செய்திடுமே நான் அக்கினியே

பலிபீட அக்கினியால் என் நாவை தெடும் தேவனே
நான் பரிசுத்தத்தோடு என்றும் உம் திருபணி செய்திடவே நான் அக்கினியே

அக்கினி நதியாய் என்னில் இன்று பாய்ந்திடும் தேவ ஆவியே
நான் அவியாத அக்கினியாய் என்றும் எரிந்திட செய்திடுமே

No comments:

Post a Comment

If you like this blog please write your comment