27 Sept 2010

பாரீர் அருணோதயம் போல்

பாரீர் அருணோதயம் போல்
உதித்து வரும் இவர் யாரோ
முகம் சூரியன் போல் பிரகாசம்
சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல

இயேசுவே ஆத்ம நேசரே
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமும் - ஆ
பதினாயிரங்களில் சிறந்தோர் - 2

காட்டு மரங்களில் கிச்சிலி போல்
எந்தன் நேசர் அதோ நிற்கிறார்
நாமம் ஊற்றுண்ட பரிமளமே
இன்பம் ரசத்திலும் அதி மதுரம் - இயேசுவே

அவர் இடது கை என் தலை கீழ்
வலக்கரத்தாலே தேற்றுகிறார்
அவர் நேசத்தால் சோகமானேன்
என் மேல் பறந்த கோடி நேசமே - இயேசுவே

என் பிரியமே ரூபவதி
என அழைத்திடும் இன்ப சத்தம்
கேட்டு அவர் பின்னே ஓடிடுவேன்
அவர் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - இயேசுவே

என் நேசர் என்னுடையவரே
அவர் மார்பினில் சாய்ந்திடுவேன்
மணவாளியே வா என்பாரே
நானும் செல்வேன் அந்நேரமே - இயேசுவே

No comments:

Post a Comment

If you like this blog please write your comment