23 Sept 2010

என் உயிரான உயிரான உயிரான

என் உயிரான உயிரான உயிரான இயேசு
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்தீர்
என் உயிரே நான் உம்மைத் துதிப்பேன்

உலகமெல்லாம் மறக்குதையா
உணர்வு எல்லாம் இனிக்குதையா
உம் நாமம் துதிக்கையிலே இயேசையா
உம் அன்பை ருசிக்கையிலே - என் உயிரான

உம் வசனம் எனக்கு உணவாகும்
உடலுக்கெல்லாம் மருந்தாகும்
இரவும் பகலுமையா
உம் வசனம் தியானிக்கிறேன் - என் உயிரான

உம் திரு நாமம் உலகத்திலே
உயர்ந்த அடைக்கல அரண்தானே
நீதிமான் உமக்குள்ளே ஓடி
சுகமாய் இருப்பேனே - என் உயிரான

No comments:

Post a Comment

If you like this blog please write your comment