தேனினுமையிலும் இயேசுவின் நாமம் திவ்ய மதுரமாமே
அதை தேடியே நாடி ஓடியே வருவாய்
தினமும் நீ மனமே - தேனினுமையிலும்
காசினிதனிலே நேசமதாக கஷ்டத்தை உட்தரித்தீர்
பாவ கசடதை அறுத்து சாபத்தை தொலைத்தார்
கண்டுணர் நீ மனமே - தேனினுமையிலும்
பாவியை மீட்க தாவியே உயிரை தாமே ஈன்றவராம்
பின்னும் நேமியாம் கருணை நிலை வரம் உண்டு
நிதம் துதி என் மனமே - தேனினுமையிலும்
காலையில் பனி போல் மாயமாய் உலகம்
உபாயமாய் நீங்கி விடும் என்றும் கர்த்தரின் பாதம் நிச்சயம் நம்பு
கருத்தாய் நீ மனமே - தேனினுமையிலும்
துன்பத்தில் இன்பம் தொல்லையில் நல்ல துணைவராம் நேசரிடம்
நீயும் அன்பதாய் சேர்ந்தால் அணைத்துணை காப்பார்
ஆசை கொள் நீ மனமே - தேனினுமையிலும்
பூலோகத்தாரும் மேலோகத்தாரும் புகழ்ந்து போற்றும் நாமம்
அதை பூண்டு கொண்டால் தான்
புன்நகர் வாழ்வில் புகுவாய் நீமனமே - தேனினுமையிலும்
No comments:
Post a Comment
If you like this blog please write your comment